வேலை வேண்டும்னா கலெக்டர் ஆபிஸ் வாங்க!

  வேலை வேண்டும்னா கலெக்டர் ஆபிஸ் வாங்க!

 ஆர்.ரமேஷ், 

   தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களுக்கான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் பிரதி இரண்டாம் வெள்ளிக்கிழமை மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமை தோறும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

  அதனடிப்படையில் வரும் 11.11.2022 மற்றும் 25.11.2022 அன்று திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான  வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஐ.டி.ஐ  (தேறியவர்/தவறியவர்), செவிலியர் மருந்தாளுநர், பொறியியல் படித்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

       ஷிண்டேவை எகிறி அடித்த உத்தவ்தாக்ரே

  எனவே மேற்கானும் கல்வித்தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 11.11.2022 மற்றும் 25.11.2022 வெர்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அமர்குஷ்வாஹா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.