ரேஷன் கடையை சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் திறந்துவைத்தார்!

ரேஷன் கடையை சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் திறந்துவைத்தார்!

க.பாலகுரு,

   திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் அருகே இனாம் கிள்ளியூர் ஊராட்சி பகுதியில்  புதிதாகக் கட்டப்பட்ட புதிய நியாய விலை கட்டிடத்தை தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும். நன்னிலம்   தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. காமராஜ் திறந்துந்து வைத்தார்.

     தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  சுமார் 14 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு  புதிய நியாய விலை கடையை திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார்.

   அப்பொழுது பேசிய காமராஜ், வலங்கைமான் ஒன்றிய பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாலங்கள் நமது ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதிக்கு எது தேவையோ அதை செய்ய கடமைப்பட்டுள்ளதாக கூறினார்.      இந்த நிகழ்வில் வலங்கைமான்  மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர்  ஒன்றிய பெருந்தலைவர் சங்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.