அதிமுக போராட்டம் திடீர் தள்ளிவைப்பு!

அதிமுக போராட்டம் திடீர் தள்ளிவைப்பு!

 ஜி.சாந்தகுமார்,

அ.தி.மு.க. சார்பில், கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 9-ந் தேதி அன்று பேரூராட்சிகளிலும், 13-ம் தேதி நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14-ம் தேதி ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

   தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை போன்றவற்றை கண்டித்து நடப்பதாக இருந்த ஆர்பாட்டம் தற்போது தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.  

   மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9-ம் தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வரும் 16-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

  இந்நிலையில், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் நாளை நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.