பஜாஜ் கம்பெனி மேலாளர் வீட்டில் நூதன கொள்ளை!!லாவகமாக கண்டுபிடித்த வாணியம்பாடி கிராமிய போலீசார்!

ஜி.கே.சேகரன்,

பஜாஜ் இன்சூரன்ஸ் கம்பெனி மேலாளர் வீட்டில் 39 சவரன் நகை நூதன முறையில் கொள்ளை போனது வேலை செய்த பெண்ணை கைது செய்து அவரிடமிருந்த 19 சவரன் நகைகள் மீட்ட இன்ஸ்பெக்டர் பேபி¢.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியை சேர்ந்தவர் சித்தார்த்தன் காந்தி பிரசாந்த். இவர் சென்னையில் பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வரும் நிலையில், வீட்டில் இவரது தந்தை சண்முக கணேசன் மற்றும் தாய் இருவரும் வசித்து வருகின்றனர்.

 இந்நிலையில் அவர்களது உறவினரான அதே பகுதியை சேர்ந்த லதா என்ற பெண் கடந்த ஒரு வருட காலமாக  வேலை செய்து வந்துள்ளார்.

  சித்தார்த்தன் காந்தி பிரசாந்த் சென்னையிலும் மற்றும் அவரது சகோதரிகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர்களது சுமார் ஒரு கிலோ நகைகள்  வீட்டில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் வயதான தம்பதியினர் இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வீட்டு வேலைக்கார பெண்ணான லதா வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகளை சிறுக சிறுகாக அவ்வப்போது எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்துள்ளார்.

  வீட்டிலிருந்த நகைகள் தனது சகோதரிகள் வெளிநாட்டில் இருந்து வரும் போது எடுத்து போட்டுக் கொள்வதும் மறுபடியும் வைத்துவிட்டு செல்வதும் வழக்கமாக இருந்த நிலையில் திடீரென நகைகள் குறைந்து இருப்பதை கண்ட சித்தார்தன் காந்தி பிரசாந்த் சந்தேகத்தின் பேரில் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வீட்டிலிருந்த நகைகளை 5 சவரன், 10 சவரன் என அவ்வப்போது நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்று விற்பனை செய்தது தெரிய வந்தது.

  இதனைத் தொடர்ந்து அவரை வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேபி அவர்களின் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

  பின்னர் அவரிடமிருந்த 19 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

   வயதான தம்பதியினரை பார்த்துக் கொள்வதற்காக உறவினர் பெண்ணை வீட்டில் வேலைக்காக அமர்த்தப்பட்ட நிலையில் நம்பிக்கையாக வீட்டில் வேலைக்கு வைக்கப்பட்ட பெண் நூதன முறையில் 39 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.