10 சதவிகித இட ஒதுக்கீடு ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டை பலவீனப்படுத்தும்! செ.கு.தமிழரசன் பேட்டி

10 சதவிகித இட ஒதுக்கீடு ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டை பலவீனப்படுத்தும்! செ.கு.தமிழரசன் பேட்டி

  ஜி.கே.சேகரன்,

  10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டை பலவீனப்படுத்தும் - தமிழக முதல்வர் கூட்டிய கூட்டம் தோழமை கட்சிகளை காப்பாற்ற தான் சமூக நீதியில் அரசு பின் வாங்குகிறது - இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு தமிழரசன் வேலூரில் பேட்டி!

  வேலூர்மாவட்டம்,வேலூரில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் புதிய நாடாளுமன்றகட்டிடத்திற்கு அம்பேத்கரின் பெயரை சூட்ட வேண்டும்.

  பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

 இந்த இட ஒதுக்கீடு ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடு முறையை பலவீனப்படுத்துவதாகும், இட ஒதுக்கீட்டை முழுமையாக பலவீனப்படுத்த தான் மத்திய மாநில அரசுகள் இது போன்று செயல்படுகிறது.

   எனவே 10 சதவிகிதம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அரசு கைவிட வேண்டும் தமிழக அரசுக்கு சமூக நீதியில் உண்மையாக அக்கறை இருக்குமானால் இந்த வழக்கின் மீது உடனடியாக அப்பீல் செய்திருக்க வேண்டும்.

  10 சதவிகித இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு அநீதியாக அமையும் தமிழக முதல்வர் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இவர் ஏன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை, கூட்டிருக்கலாமே? தோழமை கட்சிகளை காப்பாற்ற சமூக நீதியை காப்பாற்றாமல் பின் வாங்குவதாக உள்ளது முதல்வரின் நடவடிக்கை என்று கூறினார்

   இந்த பேட்டியின் போது பொருளாளர் கௌரிசங்கர் ,பிரபு தலித்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.