காவலர் கூட்டுறவு சங்கத்தில் சீட்டிங் சாம்பியனா? மூன்று கோடிவரை மோசடி... பறக்கும் புகார்!
ஜி.கே.சேகரன்,
வேலூர் காவலர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு, பாதிக்கப்பட்ட காவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் இதுவரையில் ரூ.3 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு.
வேலூர் மாவட்டம்,வேலூர் தெற்கு காவல்நிலைய குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் பாண்டியன்.
இவரை ஏமாற்றி இவரது ஆவணங்களை வைத்து இவருக்கே தெரியாமல் வேலூர் காவலர் கூட்டுறவு சங்கத்தில் செயலாளர் கஜேந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் ஒருவர் உள்ளிட்டோர் ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டிருக்கிறது.ஸ் மேற்படி காவலர் பாண்டியனின் பெயரில் கூட்டுறவு சங்கத்தில் ரூ.5 லட்சம் வரையில் பெற்று பண மோசடி செய்துள்ளனர்.
கடனை கட்டும் படி காவலர் பாண்டியனுக்கு காவலர் கூட்டுறவு சங்கத்திலிருந்து அறிவிக்கை வந்த பின்னர்தான் மோசடி செய்யப்பட்டிருப்பதை அவர் தெரிந்துக் ஒண்டிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டியன் இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மேற்படி கஜேந்திரன் பல காவலர்களின் ஆவணங்களை தவறாக பயன்படுத்தி ரூ.3 கோடி வரையில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட காவலர் பாண்டியன் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று மீண்டும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர்களிடம் புகார் அளித்தார்.
தன்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம், ஆனால் அந்த அலுவலகத்திலுள்ள ஒருவரே இப்படி மோசடி செய்தால்?
இது குறித்து விளக்கம் அறிய முற்பட்டோம், அந்த வகையில் குற்றச்சாட்டுக்கு ஆளான கஜேந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் ஆகியோரை தொடர்பு கொண்டோம் அவர்கள் போனை அட்டென்ட் செய்யவில்லை.