ஆணழகன் போட்டி காட்பாடியில் நடைபெற்றது!

ஆணழகன் போட்டி காட்பாடியில் நடைபெற்றது!

.கு.அசோக்,

எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஆணழகன் போட்டி காட்பாடியில் நடைபெற்றது-

 வேலூர் மாவட்டம், காட்பாடி ராயல் பிட்னஸ் மற்றும் வேலூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்பயிற்சி சங்கம் சார்பில் காட்பாடியில்இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, ஆகிய 8மாவட்டங்களைச் சேர்ந்த ஆணழகன் உடற்தகுதி போட்டி ஜெயக்குமார் பாலாஜி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

  காட்பாடியில் உள்ள ரயில்வே திருமண மண்டபத்தில் நடைபெற்ற இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் தங்களுடைய உடல் கட்டமைப்பை காட்டி தனி திறமையை வெளிபடுத்தினர்.

    இந்த போட்டியை காண ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் ஆர்வமாக கண்டு ரசித்தனர்.