உங்க திராவிடம் இனிக்குது... எங்க திராவிடம் கசக்குதா? செ.கு.தமிழரன் கேள்வி!

உங்க திராவிடம் இனிக்குது... எங்க திராவிடம் கசக்குதா? செ.கு.தமிழரன் கேள்வி!

ஜி.குலசேகரன்,

  உங்களிடம் உள்ள திராவிடம் இனிப்பு எங்களிடம், உள்ள  திராவிடம் கசப்பா, ஆதிதிராவிடர் என்ற பெயரை, சமூகநீதி என மாற்றுவது, ஏற்றுக்கொள்ளமுடியாது, ஆதிராவிடர் என்பது இழிவான வார்த்தையா? ஆதிதிராவிடர் மக்கள் மேம்பட திராவிட மாடல் அரசு எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை எல்லாம் வெற்று முழக்கம் என  ஆம்பூரில் நடைப்பெற்ற இந்தியகுடியரசு கட்சி நிர்வாகி  நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் சே.கு.தமிழரசன், பேட்டி

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியை சேர்ந்த இந்திய குடியரசு கட்சியின் முன்னாள், மாநில செயற்குழு உறுப்பினர் திவாகர் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி, ஆம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது.

   இதில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவரும், தமிழ்நாடு முன்னாள் சட்டபேரவை சபாநாயகருமான செ.கு.தமிழரன் பங்கேற்று, அவரது படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

  அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செ.கு.தமிழரசன், தமிழக கட்சிகளும், தேசிய கட்சிகளும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.  திமுகவின் கடந்த ஆட்சி  ஒடுக்கப்பட்ட தலித் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் வாழ்வாதாரம்பொருளாதாரகல்வி மேம்பட சிறப்பான திட்டங்களை, அறிவிக்கவும், இல்லை செயல்படுத்தவும் இல்லை, நடைமுறைப்படுத்துவோம் இல்லை.

  வெற்று முழக்கங்களோடு இந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.  இது மேலும் தொடரக்கூடாது என்பதிலேயே,  மக்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் விழிப்புணர்வோடு ஒருங்கிணைந்து தெளிவான உறுதியான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

 இதை அம்பேத்கர் உருவாக்கப்பட்ட இந்திய தலித் மக்களின்  தாய் கட்சியான இந்திய குடியரசு கட்சி வலியுறுத்துகிறது. 

  தற்பொழுது கூட ஆதிதிராவிடர் நல பள்ளிகளை விடுதிகளை சமூக நீதி விடுதிகளாக பெயர் மாற்றம் செய்கின்றார்கள், என்ன அவசியம்?

 ஆதிதிராவிடர் என்பது இழிவான வார்த்தையா, ஏற்றுக் கொள்ள முடியாத வார்த்தையா யார் பெயர் மாற்ற வேண்டும் என கூறினார்கள்என்ன காரணம் ஏன் அரசாங்கம் வேகமாக ஒரு உத்தரவை போட்டு இந்த பெயரை மாற்றுகிறது.

   திராவிட அரசு திராவிட மாடல்  அரசு எனக் கூறுகிறது, ஆனால் ஆதிதிராவிடர் என்ற பெயரை மாற்றி வருகிறது.

 உங்களிடம் உள்ள திராவிடம் இனிப்பு எங்களிடம், உள்ள  திராவிடம் கசப்பாஅதற்கு பாரம்பரியம் பொருளும் உண்டு, அவர்களுக்கு பாரம்பரியம் கிடையாது. வரலாறு கிடையாது. ஆதிதிராவிடர் மகாஜன சங்கம் பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்டது.

  திராவிடர் கழகத்திற்கு முன்பு, தற்போது உள்ள திராவிட கழகங்களுக்கு  முன்பு உருவாக்கப்பட்டது ஆதி திராவிடர் மகாஜன சங்க சபை. 

  ஆம்பூர் தனித் தொகுதி பகுதியாக மாற்ற வேண்டும். பாராளுமன்ற,  சட்டமன்ற தொகுதி சீரமைப்பு குழுவினர் தான் நடைமுறைப்படுத்த வேண்டும்.

  2008க்கு பிறகு தொகுதி மறுசீராய்வு குழு அமைக்கப்படவில்லை இதை மத்திய அரசு தான் உருவாக்க வேண்டும், மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.

  மாநில அரசு வலியுறுத்த வில்லை மத்திய அரசும் இதை உருவாக்கவில்லை, இப்பொழுது இது உருவாக்க முடியாது 20 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது தொகுதி மறுசீரமைப்பு  செய்ய வேண்டும், மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில்தற்பொழுது எந்த கட்சியும் தங்களது கூட்டணியை உறுதிப்படுத்தவில்லைநாங்களும் எங்கள் கட்சிக்கு கொள்கைக்கு உடன்பாடு உள்ள அரசியல் கட்சிகளோடு கூட்டணியில் உருவாக்குவோம்.

  விஜய்க்கு ஒரு தனி சக்தி இருக்கிறது இளைஞர்களின் ஆதரவு இருக்கிறது,  அவர்களுக்கு கூடும்  கூட்டம் அவர் வெளிப்படுத்துகிற அரசியலில் அவருக்குதனிப்பட்ட சக்தி இருக்கிறது என்பது மாறுபட்ட கருத்து இல்லை.

   இந்த எஸ்.ஐ.ஆர் புதியது இல்லை ஆனால் இதற்கான விமர்சனங்களும் மக்களிடம் செல்லும் கண்டனங்களும் புதிதாக உள்ளது.

  இதற்கு முன் இல்லையா எல்லாம் தேர்தல்களிலும்,  விடுபடுவதும், சேர்ப்பதும் இயல்பாக தான் இருக்கிறதுஅதற்கான உரிய காலகட்டம் உள்ளது நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

  அதிலும் நீங்கள் பிற மாநிலத்தவர்களுக்கு, வாக்குரிமை தரக்கூடாது என்பது, எப்படி தேசியபார்வை  ஆகும்,கர்நாடகாவிலும்மும்பையிலும் தமிழர்கள் சட்டமன்ற உறுப்பினராக உள்ளனர், அது தவறு என கூற முடியுமா? அங்கு தமிழர்களுக்கு வாக்க கூடாது என சொல்வீர்களா? எப்படி முடியும்.

  நிர்பந்தங்களை வையுங்கள்,  குடியிருப்பு சான்றிதழ் 10 ஆண்டுகள் 20 ஆண்டுகள் ஆகாதவர்களுக்குவாக்கு கொடுக்கக் கூடாது என ஒரு நிபந்தனை வையுங்கள்.

  ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார் பாராளுமன்றத்தில் எஸ் ஐ ஆர் என்பது நிபந்தனைக்கு உட்பட்டு ஏழைகளை மக்களின் வசதிக்குட்பட்டு அவர்களின் கால வாழ்க்கை செயல்படுத்த வேண்டும்.

  இந்த தேர்தலில் கடைசி நேரத்தில் இவ்வளவு அவசரம் காட்டுவது தவறு என்ற்8 சொன்னார், இதில் இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.