வசூல் நாயகியான ரெண்டு ஸ்டார் லேடி காக்கி! நடவடிக்கை எடுக்கப்படுமா? மூத்த வழக்கறிஞரின் பதிவு!
ம.பா.கெஜராஜ்,
ரெண்டு ஸ்டார் லேடி காக்கி ஒருவர் தமக்கு சப்போர்ட்டாக உள்ளவருக்கு அறுசுவை விருந்தளித்து வசூல்வேட்டை நடத்திவருவதாக மூத்த வழக்கறிஞர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
லஞ்ச புகார் என்கிற குழுவில் அவர் தெரிவித்திருப்பதாவது.
' வேலூர் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவல் நிலையத்துல ரெண்டு ஸ்டார் லேடி காக்கி ஒருத்தவங்க, ஒரு மாசத்துக்கு முன்னாடித்தான் டிரான்ஸ்பர்ல வந்தாங்களாம். இவங்க விஜிலென்ஸ் ரெய்டுல சிக்கிடுவோம்னு சொல்லி மருத்துவ விடுப்புல போய்ட்டு அதுக்கப்புறம் மேலிட ரெக்கமண்ட்ல திரும்பவும் பள்ளி கொண்ட நிலையத்துக்கு வந்தவங்களாம்.
ஏற்கனவே அந்த நிலையத்துல பணி செஞ்சததால, பெட்டி கேஸ்ல இருந்து பேட்டல் கேஸ் வரைக்கும் எல்லாத்துக்கும் 'ப விட்டமின்' பாய்ந்தால்தான் வேலை நடக்குதாம். எந்த மாதிரியான புகாரா இருந்தாலும் வழக்குப்பதிவு வரைக்கும் கொண்டு போகாம சம்பந்தப்பட்ட பார்ட்டிகள வர வெச்சு அரை நாள் ஆனா கூட பரவால்லனு உட்கார்ந்து கட்டப்பஞ்சாயத்து பண்ணி முடிச்சு வச்சுட்டு ரெண்டு பக்கமும் வாங்க வேண்டியதை வாங்கி பையை நிரப்பிடுறாங்களாம்.
இது ஒரு பக்கம் இருக்க, விபத்து ஏற்பட்டு வர்ற வண்டிங்க, விபத்துல இறந்துட்டு கேஸ் கொடுக்க வர்றவங்க என எந்த பாரபட்சமும் பாக்காம சம்திங் வாங்கிடுறாங்களாம்.
அதுக்கப்புறமாத்தான் வேலையாம். பாதுகாப்புக்கு டியூட்டி போட்டா உடல்நிலைய காரணம் காட்டி அம்மணி மறுத்துடுறாராம். இரவு பாரா டியூட்டி போட்டா நள்ளிரவே ஸ்டேசன்ல ஆள் இல்லாம வீட்டுக்கு கிளம்பிடுறாராம்.
இதையெல்லாம் சரிகட்ட உயர் காக்கிகளுக்கு வாரமிருமுறை வீட்ல இருந்து அறுசுவை விருந்து தயாரிச்சு ஸ்டேசனுக்கே எடுத்து வந்து அம்மணி கையாலயே விருந்தோம்பல் தடபுடலா நடக்குதாம்.
வர்ற வருமானத்த துளி கூட சக காக்கிங்க கண்ணுல காட்டாம அம்மணி வாரி சுருட்டிகினு போறத பாத்த மத்த காக்கிங்க புலம்பல் சத்தம் மாவட்ட காக்கி வரைக்கும் போயிருக்காம்..
ஏற்கனவே மாவட்ட தலைநகர் உள்பட ரெண்டு வருஷத்துல அம்மணிக்கு ஆயுதப்படை பனிஷ்மென்ட் உள்பட 5 ஸ்டேஷனுக்கு தூக்கி அடிக்கப்பட்டு இருக்காங்க. அப்படி இருந்தும் திருந்தலையேன்னு பேசிக்கிறாங்க.
மாவட்ட உயர் காக்கி மயில்வாகனன் நடவடிக்கை விரைவில் பாயும்னு விஷயம் தெரிஞ்சவங்க சொல்றாங்க..''

admin
