நறுவீ மருத்துவமனை சார்பில் முதலமைச்சருக்கு வரவேற்பு!

ம.பா.கெஜராஜ்,

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டு நாள் பயணமாக வேலூர் வருகை தந்தார். முதல்வரை நறுவீ மருத்துவமனை சார்பில் அதன் தலைவர் ஜி.வி.சம்பத், துணைத்தலைவர் அனிதா சம்பத் மற்றும் மருத்துவர்களும் ஊழியர்களும் வரவேற்றனர்.

 கள ஆய்வில் முதலமைச்சர், அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், காலை சிற்றுண்டி உணவகங்களில் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க முதல்வர் வருகை புரிந்த போது நறுவீ மருத்துவமனை சார்பில் புத்தகம் மற்றும் பூங்கொத்துக்கள் கொடுத்து வரவேற்கப்பட்டார்.