யாருடன் கூட்டணி என்பதை கடலூர் மாநாட்டில் அறிவிப்போம்! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
ஜி.கே.சேகரன்,
ஜனவரிம் 9 ஆம் தேதி யாருடன் கூட்டணி என்பதை கடலூர் மாநாட்டில் அறிவிப்போம் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜகாந்த் வேலூரில் பேட்டி
வேலூர்மாவட்டம்,வேலூரில் தனியார் திருமண மண்டபத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமானது மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் நடந்தது. இதில் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,மற்றும் பொருளாளர் சுதிஷ் உள்ளிட்டோரும் பொறியாளர் அணி ஸ்ரீதர் மற்றும் வர்த்தக அணி துணை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா நாங்கள் கழக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து வருகிறோம், விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு உணவளிக்கவுள்ளோம்.
அந்த நாள் எங்கள் கட்சிக்கு திருவிழா நாள் அதன் பிறகு எங்களின் இரண்டாம் கட்ட பயணம் இருக்கும் விஜயகாந்தின் ரதம் தயாராகி கொண்டிருக்கிறது சென்னையிலிருந்து ரதம் வரும் எங்கள் நம்பிக்கையை எங்கள் நிர்வாகிகளிடம் நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம்.
2026 தேர்தல் எப்படி இருக்கும் எப்படி சந்திப்பது என ஆலோசனை செய்தோம் யாருடன் கூட்டணி என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
எங்கள் கட்சியின் வளர்ச்சியை நோக்கி செல்கிறோம் உள்ளம் தேடி இல்லம் நாடி பயணத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.
ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடக்கும் தேமுதிக மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விகுறியாக உள்ளது.
ஆணவப்படுகொலைகள் லாக்கப் கொலைகள் கஞ்சா அபின் உள்ளிட்ட போதை பொருட்கள் நகை கொள்ளை கொலைகள் முதல்வர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை சரியான முறையில் சீர்படுத்த வேண்டும்.
தனி சட்டம் இயற்றி ஆணவப்படுகொலைகளை தடுப்பதை தேமுதிக வரவேற்கிறது, தனிப்பட்டை முறையில் எந்த அரசியல் கட்சியும் விஜயகாந்தின் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது இதன் மூலம் தெரிவித்துகொள்கிறேன் இன்று குடியாத்தத்தில் விஜயகாந்தின் ரத யாத்திரை துவங்குகிறது என்று சொன்னார்.

admin
