வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்கள்!

கு.அசோக்,
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்கள் நடைபெற்றது மக்கள் பங்கேற்று பெயர் சேர்த்தல் நீக்குதல் ஆகியவைகளை மேற்கொண்டனர்
வேலூர்மாவட்டத்தில் உள்ள வேலூர்,காட்பாடி,அனைக்கட்டு கேவிக்குப்பம் குடியாத்தம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று மொத்தமுள்ள 1300 வாக்குசாவடிகளிலும் வாக்காளர்கள் சிறப்பு திருத்த முகாம்கள் நடைபெற்றது.
இதில் புதிய வாக்காளர்கள் பெயரை சேர்த்தல் மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயரை நீக்குதல் பெயர் திருத்தம் முகவரி மாற்றம் ஆகியவைகள் மேற்கொள்ளலாம்.
வேலூர் ஈ.வெ.ரா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் வாக்காளர்கள் பங்கேற்று புதிய வாக்காளராக பெயர் சேர்த்தல் முகவரி மாற்றம் ஆகியவற்றை மேற்கொண்டனர்.