மதரசா குழந்தைகளை தூக்கி வீசி கொடுமை படுத்திய ஆசிரியர்! சட்டம் தாமாக முன்வந்து தண்டிக்குமா?!
ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி பகுதியில் மதரசா பள்ளியில் படிக்கும் சிறுவர்களை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கிய விவகாரம் வைரல்.பெற்றோரின் கடும் கண்டணத்தை தொடர்ந்து ஆசிரியரை பணியில் இருந்து விடுவித்த மதர்சா நிர்வாகிகள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர பகுதியில் இசுலாமியர்கள் அதிகமாக வசித்து வரும் நிலையில் இவர்கள் மதம் சார்ந்து அறிவு மற்றும் ஒழுக்கத்தை போதிக்கும் வகையில் பல மதரசா பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இதில் இசுலாமிய மதம் சார்ந்த உபதேசங்கள் மற்றும் குரான் வசனங்கள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் பயில்கின்றனர்.
இதற்காக வாணியம்பாடி பஷிராபாத் மசுதியின் மேல் தளத்தில் செயல்பட்டு வரும் மதரசா பள்ளிகள் 60 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதில் நான்கு ஆசிரியர் பணியாற்றி வரும் நிலையில், ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கடுமையாக தாக்கும் தகவல் சமுக ஊடகங்களில் வைரலானது.

இதில் ஆசிரியர் மாணவர்களை கடுமையாக தாக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஒரு சிறுவனை அலேக்காக தூக்கி வீசி அவன் வெறித்தனமாக செயல்பட்டதும் தெரியவந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களின் கடுமையான கூட்டங்களுக்கு பிறகு சம்மந்தப்பட்ட ஆசிரியர் பணியில் இருந்து விடுவிக்கபட்டதாக சம்மந்தப்பட்ட மதரசா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட அந்த ஆசிரியர் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சேர்ந்த சுஹேப் என கூறப்படும் நிலையில் மதரசா நிர்வாகிகள் ஆசிரியரின் விவரங்களை கூற மறுத்து விட்டனர்.
சட்டம் தாமாக முன் வந்த அந்த குண்டனை அமுக்குமா?

admin
