வஞ்சிரம் மீனை தூக்கி எடை போட்ட மாவட்ட ஆட்சியர்!

ம.பா.கெஜராஜ்,
அணைக்கட்டு வட்டத்தில் பல்வேறு ஆய்வுகளை நடத்திய மாவட்ட ஆட்சியர் வேலூர் மீன் மார்கெட்டினுள் நுழைந்து அங்குள்ள பகுதியை தூய்மையாக வைக்க அறிவுறுத்தினார். மீனை தூக்கி எடைபோட்டார்.
வேலூர்மாவட்டம்,அனைக்கட்டு பகுதியில் உள்ள அத்தியூர் களங்கமேடு ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. மகளிர் சுய உதவி குழுக்கள் பெண்களுடன் கலந்துரையாடல் செய்தார். பின்னர் மாடு வளர்த்தல் கத்திரிக்காய் பயிரிடுதல் பாரம்பரிய நெல் வகைகள் பயிரிடுதல்,உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் அங்குள்ள பள்ளிக்களின் கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து மாணவர்களிடம் விசாரித்தார்.
அணைக்கட்டு வட்டம் அத்தியூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் கடன்கள் பெற்று கறவை மாடுகள், ஆடுகள், நாட்டுக்கோழிகள், வளர்ப்பு தொழில் புரியும் மகளிர் சுயஉதவி குழுக்களின் செயல்பாடுகள், முன்னேற்றம் மற்றும் வாழ்வாதாரங்களை மாவட்டஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ .ப. அவர்கள் இன்று 10-11-3022) நேரில்சென்று பார்வையிட்டு பின்னர் கருத்துக்களை கேட்டறிந்தார்.
அத்தியூர் களங்கமேடு பகுதிகளில் பெண்கள் குழு உற்பத்தி பொருட்களையும் பள்ளி கட்டிடங்களையும் மாவட்ட ஆட்சியர்
குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு, மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
பின்னர் மாடு வளர்த்தல் கத்திரிக்காய் பயிரிடுதல் பாரம்பரிய நெல் வகைகள் பயிரிடுதல்,உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் வேலூரில் உள்ள மீன் சந்தையை அதிகாரிகளுடன் ஆய்வு செய்ததுடன் கோட்டை அகழியிலிருந்து உபரிநீர் வெளியேறு பகுதியை தூய்மைப்படுத்தவும் அடைப்புகளை அகற்றவும் கூறி, மீன் சந்தையை தூய்மையாக வைத்துகொள்ள அறிவுறுத்தினார். அப்போது மீன் மார்க்கெட்டிலிருந்த வஞ்சிரம் மீனை தூக்கிப்பார்த்து கையாலேயே எடை போட்டார்.
ஆட்சியருடன் வட்டாச்சியர் ரமேஷ்,ஆர்டி ஓ பூங்கொடி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்உடன் திட்ட இயக்குநர்(மகளிர்திட்டம்) திரு.செந்தில்குமரன், உதவி திட்ட அலுவலர் திரு.கலைச்செல்வன் உள்ளனர்.