முதல் நாளிலேயே அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட பாட புத்தகங்கள்!

கு.அசோக்,
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்.இதில் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வழங்கி நன்கு படிக்க வேண்டும் என வாழ்த்தினார்கள்.
பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி ராஜா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் லோகநாயகி, உதவி தலைமை ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், கிளாடிஸ்தங்க செல்வம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் அரசு பள்ளியில் விலையில்லா பாடபுத்தகங்கள் சீருடை காலணிகள் உள்ளிட்ட பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்
திருப்பத்தூர்மாவட்டம்,திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் நடைபெற்ற இலவச பாடநூல் மற்றும் சீருடைகள் வழங்கும் விழாமாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
பள்ளியில் நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்துகொண்டு மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கினார்.
இதில் அப்போது நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணை தலைவர் சபியுல்லா உள்ளிட்ட திரளான மாணவர்களும் கலந்துகொண்டனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு பெண்கள் பள்ளியில் பூக்கள் இனிப்புகள் கொடுத்து மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். கொணவட்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் சுப்பு லெட்சுமி மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகம் சீருடை காலணி நோட்டு புத்தகங்கள் புத்தப்பையை வழங்கி துவங்கி வைத்தார்.
வேலூர்மாவட்டம்,வேலூர் நகரில் உள்ள ஈவெரா நாகம்மையர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி திறந்ததை முன்னிட்டு மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பூக்கள் மற்றும் சாக்லெட்டுகள் வழங்கி மாணவிகளை வரவேற்றனர், மாணவிகள் உறுதிமொழியும் ஏற்றுகொண்டனர்.
இதே போன்று வேலூர் கொணவட்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாடபுத்தகங்கள் குறிப்பேடுகள் காலணிகள் புத்தப்பை ஜாமெண்ட் ரி பாக்ஸ் கலர் பென்சில் ,உள்ளிட்டவைகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மேயர் சுஜாதா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சம்பத் உள்ளிட்ட திரளான மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதில் மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன இவ்விழாவில் ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேசுகையில், வேலூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி மற்றும் நிதியுதவி பள்ளிகள் துவக்கப்பள்ளிகள் என மொத்தம் 937 பள்ளிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழங்கபடும் பொருட்கள் இன்றே அனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கிறோம்.
இதன் மூலம் 1,40 507 மாணவர்கள் பயனடைவார்கள் நீங்கள் இதனை பெற்று கல்வி பயில முன் வரவேண்டுமென பேசினார்.