10 ஆண்டுகள் பழமையான ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளுங்கள்!

10 ஆண்டுகள் பழமையான ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளுங்கள்!

ம.பா.கெஜராஜ்,

 10 ஆண்டுகள் பழமையான ஆதார் அட்டையை புதுப்பிக்க இப்போது எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதற்கான காலக்கெடு செப்டம்பர் 14ஆம் தேதியே முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது டிசம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 ஆதார் கார்டை அப்டேட் செய்ய இரண்டு விருப்பங்கள் உள்ளன. My Aadhaar போர்டல் மூலம் அப்டேட் செய்யலாம். அல்லது, ஆதார் சேவை மையத்துக்குச் சென்று அப்டேட் செய்யலாம். ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் பொதுச் சேவை மையத்துக்குச் சென்று பெயர், புகைப்படம், மொபைல், முகவரி போன்ற விவரங்களை புதுப்பிக்கலாம். ஆனால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் ஆன்லைனில் அப்டேட் செய்வது தற்போது இலவசம்.

அப்டேட் செய்வது எப்படி?

https://myaadhaar.uidai.gov.in/portal மீன்ற வெப்சைட்டில் ஆதார் OTP சரிபார்ப்பு மூலம் உள்நுழைய வேண்டும். அடுத்து Update Demographic ஆப்சனை கிளிக் செய்து நிலையை சரிபார்க்க வேண்டும். ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP நம்பரை உள்ளிட வேண்டும். இப்போது Update Demographic Data விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்த பக்கத்தில் தொடர்புடைய தகவலைப் புதுப்பித்து, Proceed என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அப்டேட் தொடர்பான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்வதற்கான காலக்கெடு முடிந்ததும் இதற்கு நீங்கள் ஆதார் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே ஆதாரை புதுப்பிப்பதற்கு கட்டணம் விதிக்கப்படும். ஆதாரில் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய 100 ரூபாயும், மக்கள்தொகை தரவுகளுக்கு 50 ரூபாயும், ஆன்லைனில் ஆதார் பதிவிறக்கத்திற்கு 30 ரூபாயும், முகவரியைப் புதுப்பிக்க 25 ரூபாயும் வசூலிக்கப்படும். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு டிசம்பர் 14ஆம் தேதிக்குள் இலவசமாக அப்டேட் செய்துகொள்ளவும்.

டோன்ட் மிஸ்...!