வெற்று உடம்பு -லுங்கி-தேசிய கொடியை பார்வையிட்ட ரங்கசாமி!

வெற்று உடம்பு -லுங்கி-தேசிய கொடியை பார்வையிட்ட ரங்கசாமி!

k.kalai

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெற்று உடம்பு மற்றும் லுங்கி சகிதமாக தேசிய கொடியை பார்வையிட்டார். இந்த காட்சிகள் தற்போது உலா வந்துக் கொண்டிருக்கிறது.

 இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி புதுவையில் பல வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் கோரிமேட்டில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வீட்டு மாடியில் 2 தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது. போலீசார் வழக்கம் போல் ஒரு தேசியகொடியை ஏற்றியுள்ளனர்.

 அதே நேரத்தில், அங்கன்வாடி மூலம் கொடுத்த கொடியும் ஏற்றப்பட்டுள்ளது. இதனை இன்று காலை பால்கனிக்கு மேல்சட்டையின்றி கைலியுடன் வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார். இதனை படமெடுத்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் அதை பகிரவே தற்போது அது வைரலாகி வருகிறது.