புஸ்ஸி ஆனந்த் தலையீட்டால் 2 சதவீத வாக்குகள் கூட கிடைக்காது!விஜய்யின் ஆலோசகர் ஜான் அதிரடி ஆடியோ!

புஸ்ஸி ஆனந்த் தலையீட்டால் 2 சதவீத வாக்குகள் கூட கிடைக்காது!விஜய்யின் ஆலோசகர் ஜான் அதிரடி ஆடியோ!

ம.பா.கெஜராஜ்,

 தவெக தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி பேசியதாக வெளியான ஒரு ஆடியோவால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் புஸ்ஸி ஆனந்த் தலையீட்டால் 2 சதவீத வாக்குககிடைப்பதே கஷ்டம், நானோ 30 சவீத வாக்களை நோக்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று ஜான் பேசியிருக்கிறார்.

  அந்த ஆடியோ பதிவில் பேசியிருப்பதாவது, ''புஸ்ஸி ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்துவதால் கட்சிக்குதான் பின்னடைவு ஏற்படுகிறது. விஜய் என்ற ஒற்றை நபருக்காக தான், இந்த கட்சிக்கு வாக்குகள் வரப்போகிறது. அப்படி இருக்கும்போது, புஸ்ஸி ஆனந்த் தன்னை முன்னிலைப்படுத்தி வருவது கட்சிக்கு பின்னடைவுதான்.

   திமுகவில் ஸ்டாலின் புகைப்படத்துக்கு பதிலாக, துரைமுருகன் படத்தை போட்டால் வாக்குகள் கிடைக்குமா? ஜெயலலிதா புகைப்படத்துக்கு பதிலாக சசிகலா புகைப்படத்தை வைத்தால் வாக்குகள் வருமா? நான் பாமகவுக்கு வேலை பார்க்கும்போது, ராமதாஸை தவிர்த்து, அன்புமணியை மட்டுமே தான் முன்னிலைப்படுத்தினேன்.

 எந்த கட்சியாக இருந்தாலும், முதல்வர் வேட்பாளரைதான் முன்னிலைப்படுத்த வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, அண்ணா வரிசையில் விஜய்யை இடம்பெற செய்ய நான் வேலை செய்து வருகிறேன். அப்படியிருக்க, கோமாளி கூட்டங்களை கட்சிக்குள்ளே விட்டால் எப்படி?

  கட்சிக்கு விஜய்யின் முகம் மட்டும்தான் இருக்கிறது. மற்றபடி புஸ்ஸி ஆனந்த்தான் எல்லாம் என நிர்வாகிகள் நினைத்துவிட்டனர். 30 சதவீதம் வாக்குகள் வாங்கும் அளவுக்கு நான் வேலை பார்த்து வருகிறேன். ஆனால், இப்படியே போனால், 2 சதவீத வாக்குகள் கூட தேறாது' என அந்த ஆடியோவில் பேசப்பட்டுள்ளது.

 இந்த ஆடியோவால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் புஸ்ஸி ஆனந்த் மீதான அதிருப்தி மேலும் அதிகரித்துள்ளது.