எம்.ஜி.ஆர். போட்டோவுக்கு பதில் அரவிந்த் சாமி போட்டோ ஓட்டிய அதிமுகவினர்!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பிளக்ஸ் பேனரில் நடிகர் அரவிந்த்சாமி புகைப்படம் ஒட்டி தவறிழைத்திருக்கிறார்கள். இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானதால் உஷாரான அதிமுகவினர் எம்ஜிஆர் புகைப்படத்தை ஒட்டி அதை மறைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மாதனூர் ஒன்றியம் மேற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107 பிறந்த நாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாதனூர் ஒன்றியம் மேற்கு மாவட்டம், கீழ்மிட்டாளம் கிளை கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,
இதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில் எம்ஜிஆர் புகைப்படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்த்சாமி புகைப்படத்தை பிரிண்ட் செய்து வைத்தனர் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதால் அதிமுகவினர் நடிகர் அரவிந்த்சாமி புகைப்படத்தின் மீது எம்ஜிஆர் அவர்களின் புகைப்படத்தை ஒட்டி சமாளித்தனர்.