கேவலமான விமர்சனங்களை ஒதுக்கி செல்கிறோம்! எம்.பி.கதிர் ஆனந்த் பேட்டி!

ஜி.கே.சேகரன்,
ஒது பத்திரிகையின் கேவலமான விமர்சனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாங்கள் செல்கிறோம் என்று வேலூர் எம்பி கதிர் ஆனந்த் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.
வஞ்சூர் மற்றும் ஜாப்ராபேட்டை பகுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திடீர் ஆய்வு நடத்தினார்.
வேலூர்மாவட்டம், காட்பாடி தொகுதிக்குட்பட்ட வஞ்சூர் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி மற்றும் ஜாப்ராபேட்டை நடுநிலைப்பள்ளி ஆகியவைகளில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திடீர் ஆய்வு செய்ததுடன், அங்குதயாரிக்கப்பட்டிருந்த உணவை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
காலை சிற்றுண்டி சரியாக வழங்கப்படுகிறதா நன்றாக இருக்கிறதா எனவும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக முதலமைச்சர் அவர்களால் காலை சிற்றுண்டி திட்டம் மாநகராட்சி பள்ளிகளில் துவங்கப்பட்டு அதன் விரிவாக்கமாக கிராமப்புற பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு செய்த போது சந்தோஷமாக உள்ளது.
தலைமை ஆசிரியர்களும், காலை சிற்றுண்டி துவங்கபட்ட பின்னர் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவது தவிர்க்கபடுகிறது. மாணவர்கள் வருகையும் சதவிகிதமும் உயர்ந்துள்ளது.
ஒரு நாளேடு அறுவக்க தக்க வகையில் மக்கள் மத்தியில் விமர்சனம் செய்துள்ளனா.¢ நீங்கள் உதயசூரியனை கைகளால் மறைக்க முடியாது முதல்வரின் திட்டங்கள் எல்லா தரப்பு மக்களுக்கும் மீண்டும்மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை நிலைநாட்டுகிறது.
முதல்வர் என் கடன் பணி செய்கிடப்பதே என்ற வகையில் செயல்பட்டு வருகிறார் ஒரு பத்திரிகை இதனை எடை போட்டு பார்ப்பது கவலை கிடையாது. ஆனால் வெளிமாநில அதிகாரிகள் வந்து இந்த திட்ட செயல்பாடுகள் சாத்திய கூறுகள் குறித்தும் ஆய்வு செய்து செல்கின்றனர் இந்தியாவிற்கு எடுத்துகாட்டாக இந்த திட்டம் உள்ளது கேவலமான விமர்சனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாங்கள் செல்கிறோம் என கூறினார்.