கூண்டோடு பாஜகவுக்கு தாவும் குடியாத்த கிராம திமுகவினர்!

ஜெ.தே.பி.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் கிழக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களில் திமுகவினர் பாஜகவிற்கு தாவினார்கள். அவர்களில் 30 ஆண்டு கட்சிக்காரர்களும் அடக்கம்.
குடியாத்தம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நத்தம் பி.பிரதீஸ். இவரை மையப்படுத்தித்தான் உடன்பிறப்புகள் பொங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
பத்து வருடத்துக்கு முன்பு விஜயகாந்த் கட்சியில் இருந்து திமுகவிற்கு வந்தவர் இப்போது ஒன்றிச் செயலாளர் மற்றும் அரசு ஆலோசனைக் குழு உறுப்பினர் மனைவி கவுன்சிலர், இவற்றுக்கு எல்லாம் மேலாக கட்சியில் விவசாயிகள் பலர் இருக்கும் போது கட்சிக்கு எந்த சம்பந்தமே இல்லாத, விவசாயியே இல்லாத இவருடைய தந்தையை ஒன்றிய சேர்மனாக நியமித்துக் கொண்டார்.
தெற்கு ஒன்றிய செயலாளரை டம்மியாக்கி வைத்துக்கொண்டு கட்சிக்காரர்களிடத்தில் காண்ட்ராக்டர் இடமும் தமிழ்நாட்டிலேயே அதிக பர்சன்டேஜ் வாங்குபவர் என்றும் மிக முக்கியமாக இரண்டு ஒன்றியங்களிலும் அனைத்து ஊர்களிலும் கட்சிக்காரர்களிடத்தில் கோஷ்டி பூசலை வளர்த்து கட்சியை அழித்துக் கொண்டு இருக்கிறார் என்று அவரைப் பற்றி குமுறுகின்றனர்.
இதனால் குடியாத்தன் கூடநகரம் கிராமத்திலுள்ள திமுகவின் மூத்த முன்னோடிகள் பாஜக வை நோக்கி மேளதாளங்கள் முழங்க ஐக்கியமாகி வருகிறார்கள்.
மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மாநில உளவுத்துறை கண்டு குடியாத்தம் திமுகவில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொண்டு அதை தடுத்தால் மட்டுமே கட்சியின் சரிவை தடுக்க முடியும் என்று தங்களது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.