பாஜக வெளியேறினால்... விசிக - அதிமுக கூட்டாம்! திருமாவளவன் பேட்டி!

உ.சசிக்குமார்,
விடுதலை சிறுத்தை கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணிக்கு போகக் கூடும் என்ற பேச்சுகள் உள்ள நிலையில், தற்போது ஒரு கேள்விக்கான பதிலை பேசும் பொருளாக்கியுள்ளார் திருமாவளவன்.
திருச்சிக்கு வருகை தந்த திருமாவளவன் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு நிருபர், "பாஜக விலகினால் அதிமுக கூட்டணியில் இணைவீர்களா?" எனக் கேள்வியெழுப்பினார். அதற்கு திருமாவளவன், "இது ஒரு யூகக் கேள்வி. முதலில் பாஜக விலகட்டும். அதன் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்" என்றார்.
திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணம் திருமாவளவனுக்கு இல்லை என்றால், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என ஒரே வார்த்தையில் சொல்லி இருக்கலாமே. பாஜக விலகட்டும் பார்க்கலாம் என்றால், அதிமுக கூட்டணியில் இணையும் எண்ணம் திருமாவளவனுக்கு இருக்கிறது என்றுதானே அர்த்தம் என அரசியல் பார்வையாளர்கள் சொல்லி வருகிறார்களாம்.