செம்மரக் கட்டை பதுக்கிய போலீஸ்காரரை காப்பாற்றிய வனத்துறையினர்! தலை காய்ந்து போனவரை அரெஸ்ட் செய்து சாதனை!
ஜி.கே.சேகரன்,
ஆலங்காயம் அருகே காப்பு காட்டில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ஒருவர் கைது செய்து அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்து வனத்துறையினர் நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த காவலூர் காப்புகாடு பகுதியில் வன அலுவலர் சேகர் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த பீமன் வட்டம், ஜார்பெண்டா பகுதியை சேர்ந்த கணபதி (38) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவர் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்
குறிப்பு:- தலை காய்ந்தவர்களை அரெஸ்ட் செய்யும் இதே அதிகாரிகள் சமீபத்தில் திருப்பத்தூர் சி.ச.நகரில் ஒரு வீட்டில் ரெய்டு நடத்தி செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
காவல் துறையில் பணியாற்றும் ஒரு நபர் செம்மரக்கடைகளை பதுக்கி வைத்திருக்கிறார் என்று கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் வீட்டில் ரெய்டு செய்தனர்.
பின்னர் மூட்டைகளில் செம்மரக்கட்டைகளை எடுத்துச்சென்று அந்த காவலரையும் உடன் பிடித்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அவரிடம் பேரம் பேசி மாலையில் வழியனுப்பிவைத்திருக்கிறார்கள். அதற்காக பல கேக் துண்டுகளை பெற்றதாக தகவல்.
மேற்படி சிக்கிய காவலர் நாட்டு மருந்து கொடுக்கும் வேலையை ஒரு பிசினஸாக செய்து வருகிறாராம். அப்படியிருக்க அவரிடம் சிகிச்சைக்காக வந்து பணம் இழந்த ஒரு பாய் தான் இந்த ரகசிய தகவலை அள்ளிவிட்டாராம்.
ஆனால் வன அதிகாரிகள் பலன் அடைந்து குற்றவாளிகளை தப்பவிட்டதல் பாய் காண்டாகி ஜமாத்தை அனுகி அதன் வாயிலாக வனத்துறையின் டிஎப்.ஓ முதல் சிசிஎஃப் வரை புகாரை தட்டி தூக்க உள்ளாராம்.
அந்த தஞ்சை கோவிலை உருவாக்கியவரின் பின் பெயரை கொண்டவருக்கு ஆப்பு சீவப்படுதாம்.
இந்த சங்கதிகள் மாவட்ட காவல் அலுவலகம் வரை நீண்டும் கூட செம்மரத்தை பதுக்கிவைத்தவரை பதுக்கிவிட்டார்களாம்.
நல்ல ஆபிசர்ஸ்,

admin
