பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு! லஞ்சம் ஒழிப்பு பிரிவில் புகார் அளிக்க ஏற்பாடு!

பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு! லஞ்சம் ஒழிப்பு பிரிவில் புகார் அளிக்க ஏற்பாடு!

ம.டெல்லிராஜன்,

 கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அஞ்சட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்து மாறுதலாகி சென்றவர் சுமித்ரா.

   இவர் அஞ்சட்டிகாவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த போது ஒரு தாய் புகார் ஒன்றை அளித்தார். அதில் திமுகவின் முக்கிய பிரமுகரான பெரியநாயகம் என் குழந்தைக்கு பாலியல் துண்புறத்தல் செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

  அந்த புகாரை பெற்றுக் கொண்டு இன்ஸ்பெக்டர் சுமித்ரா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் அவர் மாறுதலாகி சென்றதும், அந்த இடத்துக்கு கதிர் வேலு என்கிற இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டார்.

   அவர் பெண்டிங் வழக்குகளை தோண்டி எடுத்த போது சிறுமியின் தாய் கொடுத்த புகார் பற்றி தெரியவந்தது.  உடனே குற்றம் சாட்டப்பட்ட நபரான பெரிய நாயகத்தை போலீஸ் டீம் அள்ளிக்கொண்டு வந்து கவனித்தனர்.

 அதில் பெரியநாயகம் ரூ.2 லட்சத்தை பெண் இன்ஸ்பெக்டருக்கு  லஞ்சமாக கொடுத்து நடவடிக்கையிலிருந்து தப்பியதாக தெரியவந்தது.

 இது தெடர்பாக புதிய இன்ஸ்பெக்டர் கதிர்வேலு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் சுமித்ரா சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்.

 ஒசூர் டிஎஸ்பி ஆனந்தராஜ் அவர்கள் அந்த பெரியநாயகம் மீதான புகார் குறித்த கோப்பை கொண்டு வந்து ஒப்படைக்குமாறு சுமித்ரா இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டாராம். மூன்று நாட்களாகியும் அவர் அதை ஒப்படைக்காததால் இந்த பிரச்சனை என்று போலீஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

  ஆக, திமுக புள்ளியான பெரியநாயம் உள்ளே கம்பி எண்ணிக் கொண்டிருக்க, அவரை காப்பாற்ற முயன்ற பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டு வெளியில் உள்ளார்.

 குறிப்பு:- போக்ஸோ வழக்கிலிருந்து குற்றவாளியை தப்பவிட முயன்ற இன்ஸ்பெக்டர் மீது வெறும் சஸ்பெண்டு நடவடிக்கை மட்டுந்தானா? அவர் மீது லஞ்ச ஒழிப்புதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கூறுவதுடன் புகாரும் அளிக்கவிருக்கிறார்களாம்.