நடைபயணத்தில் ஜர்க் அடித்த அண்ணாமலை! அவரது படத்தை பேனரில் வைக்காததால் பரபரப்பு!

உ.சசிகுமார்,
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நேற்று சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். ஆகவே மாநகரின் முக்கிய பகுதிகளில் வரவேற்பு வளைவு அலங்காரம் வைக்கப்பட்டிருந்தது. அதில், அண்ணாமலை படம் தவிர்த்து வானதி உட்பட பலரது படங்கள் இருந்தன.
அதை கவனித்த அண்ணாமலை அப்படியே ஜர்க் அடித்து, நான் தான் நடைபயணம் மேற்கொள்கிறேன், எனது படத்தையே வைக்கவில்லையே? என்று கேட்டிருக்கிறார்.
பதறிய பாஜக நிர்வாகிகள் அவசரம், அவசரமாக, அருகில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில், கலர் பிரிண்ட் எடுத்து, அண்ணாமலை போட்டோவை ஒட்டினர்.