ஆந்திரா பூங்கா யானை தமிழக காட்டுக்குள் நுழைந்து கலாட்டா!

ஆந்திரா பூங்கா யானை தமிழக காட்டுக்குள் நுழைந்து கலாட்டா!

 ஜி.கே.சேகரன்,

  வாணியம்பாடி தும்பேரி அடுத்த அண்ணா நகர் பகுதியில் யானைகள் நடமாட்டம், வாழை , தென்னை மரங்கள் மற்றும் தண்ணீர் பைப்புகள் சேதம்விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அச்சம்.

   ஆந்திரா மாநிலம், குப்பம் மண்டலத்தில் உள்ள நன்னியாலயா பகுதியில் உள்ள வன உயிரியல் பூங்கா பகுதியில்  இருந்து ஒற்றை குட்டி ஆண் யானை ஒன்று தமிழக ஆந்திரா எல்லைக்குள் வந்தது.

   வாணியம்பாடி வனசரகத்திற்குகுட்பட்ட தேவராஜபுரம் வழியாக வெலதிகாமணி பெண்டா, மதகடப்பா, ஜிட்டு கானாறு மற்றும் துர்கம் ஏரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில்  முகாமிட்டுள்ளது.

  அந்த யானை கடந்த 2 நாட்களாக தமிழக ஆந்திர எல்லை ஒட்டியுள்ள தும்பேரி அடுத்த  அண்ணாநகர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து விவசாயிகள்  முருகேசன்,

  கோவிந்தராஜ் ஆகியோர் நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவிட்டது.

  அங்கு பராமரிக்கப்பட்டு வந்த வாழை மரங்கள் மற்றும் கடந்த 3 ஆண்டுகளாக பராமரிப்பு செய்து வந்த தென்னைச் செடிகள் ஆகியவற்றை பிடுங்கி சேதம் செய்துள்ளது.

  மேலும் சொட்டு நீர் பாசன தண்ணீர் பைப்புகள் ஆகியவற்றை உடைத்து சேதம் செய்துள்ளது.இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி வன சரக அலுவலர் குமார் தலைமையிலான  வனத்துறையினர் விரைந்து வந்து முகாமிட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.

  கடன் பெற்று பயிர் செய்து வரும் நிலையில், ஏற்கனவே காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்கள் சேதம் ஏற்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் தற்போது யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்துள்ளதால்  தங்களுக்கு பெரிய அளவில் நட்டம் ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும், யானைகள் விவசாய நிலங்களுக்குள் வராதவாறு வனப்பகுதியை ஒட்டி தடுப்புகள் அமைத்து விவசாயிகளுக்கும் நிலங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.