வரவேற்க எடப்பாடி! வழியனுப்ப ஓ.பி.எஸ்.!பிரதமரின் தமிழக விசிட்!

வரவேற்க எடப்பாடி! வழியனுப்ப ஓ.பி.எஸ்.!பிரதமரின் தமிழக விசிட்!

ம.பா.கெஜராஜ்,

  சர்வதேச செஸ் போட்டியை துவக்கிவைத்த பாரத பிரதமர் மோதி, மறுதினம் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். இயை யாவும் அரசாங்க நிகழ்ச்சியாகும்

 மேற்படி நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்த மோதியை வரவேற்க எடப்பாடி பழனிசாமியும்,  வழியனுப்புவதற்கு ஓ.பன்னீர்செல்வமும் அனுமதி கேட்டு பெற்றனர்.

  அதே போல் இருவரும் தனித்தனியாக சந்திக்க நேரம் கேட்டு இருந்தார்கள். ஆனால் அவர்கள் இருவருக்கும் நேரம் கொடுக்கவில்லை. இது இருவருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

  அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டுள்ள குடுமிப்பிடி சண்டை ஏற்பட்டிருக்கும் நிலையில்,  பிரதமர் மோதியின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கா அல்லது  ஓ.பன்னீர் செல்வத்துக்கா என்று பட்டிமன்றங்கள் நடந்து வருகின்றன.

 கட்சி நிர்வாகிகள்  பலரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு அதிகம் இருப்பதால் மோதிஜியின் ஆதரவும் அவருக்குதான் என்று ஒரு சாரார் சொல்லி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 அப்படியிருக்க, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று 4 நாள் பயண திட்டத்துடன் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். டெல்லியில் தங்கி இருக்கும் போது மோடியை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் பற்றி புகார் தெரிவிக்கவும், மோடியின் ஆதரவை பெறவும் முடிவு செய்து இருந்தார்.

 ஆனால் டெல்லியில் மோடியை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. இதனால் ஏமாந்து போய் சென்னை திரும்பினார்.

   இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வந்த மோதி நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கி இருந்தார். நேற்று இரவு அல்லது இன்று காலையில் அவரை சந்திப்பதற்கு தேவையான நேரம் இருந்தது. சென்னை வந்த மோடியை வரவேற்க எடப்பாடி பழனிசாமியும், இன்று வழியனுப்புவதற்கு ஓ.பன்னீர்செல்வமும் அனுமதி கேட்டனர். அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

   ஆனால் இருவரும் தனித்தனியாக சந்திக்க நேரம் கேட்டு இருந்தார்கள். இருவருக்கும் நேரம் வழங்கப்பட்வில்லை.

 இதை வைத்து பார்க்கின்றபோது, கூட்டணி கட்சியின் தலைவர்கள் என்ற ரீதியில் இருவரிடமும் மோதி நட்பு பாராட்டுகிறார். அதேநேரம் அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவாகாரத்தில் இப்போதைக்கு யாருக்கும் ஆதரவளிப்பதை மோதி விரும்பவில்லை என்று நம்பப்படுகிறது.

   அதே நேரத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொண்டு இறுதி ஒரு முடிவுக்கு வரட்டும் என்பதே மோதிஜியிம் எண்ணம்.