வர்த்தக சங்க தேர்தல்!

வர்த்தக சங்க தேர்தல்!

க.பாலகுரு,

நன்னிலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெ ற்றது

 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சியில் மொத்தம் 425 வர்த்தகர்கள் கடைகள் நடத்தி வருகிறார்கள் அவர்களில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வர்த்தக சங்க தேர்தல் நன்னிலம் மகாஜன சபா பள்ளியில் காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

   சங்க நிர்வாகிகள் தேர்தலில் தலைவர் பதவிக்கு நான்கு போட்டியாளர்களும், பொதுச்செயலாளர் பதவிக்கு இரண்டு பேரும், துணைச் செயலாளர் பதவிக்கு மூன்று பேரும்,

துணை தலைவர் பதவிக்கு இரண்டு பேரும், பொருளாளர் பதவிக்கு இரண்டு பேரும் போட்டியிட்டனர்¢.

  இத்தேர்தல் காவல்துறையினர் பாதுகாப்புடன் நடைபெற்றது. இதில் வர்த்தகர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இந்த வாக்குபதிவு இன்று மாலை 5 மணி அளவில் முடிந்ததும், வாக்கு என்னும் பணி துவங்கி  வெற்றி பெற்ற நிர்வாகிகள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.