சசிகலா -ஓ.பி.எஸ்.- தினகரன் கூட்டு! அமித்ஷா அட்வைஸ்!

சசிகலா -ஓ.பி.எஸ்.- தினகரன் கூட்டு! அமித்ஷா அட்வைஸ்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

சசிகலா -ஓ.பி.எஸ்.- தினகரன் கூட்டு வைத்தால் எடபாடியை பணியவைக்கலாம், அப்படியே ஆட்சியை பிடிக்கலாம் என  அவர்களுக்கு அமித்ஷா அட்வைஸ் சொன்னதாக கூறப்படுகிறது.

 அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றியிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் கைகொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒன்று மட்டும் இன்னும் வர வேண்டியுள்ளது. இந்த சூழலில் அமித் ஷாவை சந்தித்து சசிகலா பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

  அதிமுக வுக்குள் கால் பதிக்க திட்டமிட்டு சசிகலா காய் நகர்த்திய போதெல்லாம், அதற்கு தடை போட்டவர் எடப்பாடி.

  அப்படியிருக்க கர்நாடக தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அமித்ஷாவை சசிகலாவை சந்தித்ததாக கூறப்படுகிறது.

  அதன் பின்னர் நீங்கள் மூன்று பேருமே ஆளுக்கொரு திசையில் நிற்கிறீர்கள் என்று அங்கிருந்து கூறப்பட்ட பின்னரே பன்னீர், டிடிவி தினகரன் சந்திப்பு நடைபெற்றதாம்.

  இந்நிலையில், விரைவில் ஓபிஎஸ், சசிகலாவையும் நேரடியாக சந்திக்க உள்ளார். மூவர் கூட்டணி அமைந்துவிட்டால் 2024 தேர்தலுக்குள் கட்சிக்குள்ளோ, கூட்டணிக்குள்ளோ இணைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். 2021 தேர்தலின் போதே அமித் ஷா முன்வைத்த யோசனையை ஏற்க மறுத்து டிடிவி தினகரனின் அமமுகவை கூட்டணிக்குள் இணைக்க எடப்பாடி மறுத்தார் என்பது நினைவிருக்கலாம்.

 ஒருவேளை அவ்வாறு கூட்டணி அமைந்திருந்தால் கூடுதலாக இருபது இடங்கள் அதிமுக கூட்டணிக்கு வந்திருக்கும். ஆகவே, ஒவ்வொரு வெற்றியும் முக்கியமானதாக பாஜக பார்க்கிறது என்பதால், இம்முறை பாஜக அவ்வாறு எடப்பாடி சொல்வதை கேட்டுக்கொண்டு இருக்காது. இந்த தேர்தலில் .

 மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரவேண்டும் என்றால் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். எனவே அனைவரையும் அரவணைத்து செல்ல பாஜக எடப்பாடி பழனிசாமியை நிர்பந்திக்கும்.

   சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் மூவரும் இணைந்து மேடையை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு மாநாடு நடத்தப்பட்டால் அது எதிர்தரப்புக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

 அப்படியெனில் ஒரு பக்கம் மூவர் கூட்டணி, மறு பக்கம் எடப்பாடி தொடர்புடைய வழக்கும், டெல்லி மேலிடத்தின் கையில் லகான் என எடப்பாடிக்கு இடிதான்.