சட்ட விரோதமாக குட்கா பதுக்கி வைத்திருந்தவர் கைது.. போதை பொருட்கள் பறிமுதல்!

சட்ட விரோதமாக குட்கா பதுக்கி வைத்திருந்தவர் கைது.. போதை பொருட்கள் பறிமுதல்!

க.பாலகுரு,

திருவாருர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, பான்மசாலா மற்றும் கூலிப் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கருண் கரட் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் சரகங்களிலும் சட்ட விரோதமான குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பான தணிக்கை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  இந்நிலையில் இன்று பேரளம் காவல் சரக போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பேரளம் காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ்குமார் மற்றும் காவலர்கள் சந்தேக நபரான வெங்கட்ராமன் 42/25, த/பெ. காத்தபெருமாள், காந்தி நகர், பூந்தோட்டம் என்பவரது வீட்டை சோதனை செய்த போது அவரது வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 ரூ.20,000/- மதிப்புள்ள ஹான்ஸ், கூலிப் பறிமுதல் செய்யப்பட்டு, அதனை மொத்த விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த வெங்கட்ராமன் 42/25, த/பெ. காத்தபெருமாள், காந்தி நகர், பூந்தோட்டம் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டார்.

 மேலும் இவர் மொத்த விற்பனை செய்வதற்காக வைத்திருந்த டிவிஎஸ் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 குட்கா பொருட்களை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை மேற்கொண்ட பேரளம் காவல் ஆய்வாளர் சுகுணா மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்கள்.

   மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இளம் வயதினரின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை கடத்துதல் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீதும், கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் எச்சரித்துள்ளார்கள்.