குழந்தைகளுடன் கொஞ்சிய வேலூர் கலெக்டர்!

ம.பா.கெஜராஜ்,
குடியாத்தம் வட்டம், எர்தாங்கல் கிராமம் ஊராட்சியில் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு துரிதமாக அப்பணிகளை முடிக்க துறைசார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், எர்தாங்கல் கிராமம் ஊராட்சியில் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (17.05.2022) பார்வையிட்டு துரிதமாக அப்பணிகளை முடிக்க துறைசார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
குடியாத்தம் வட்டம், எர்தாங்கல் கிராமம் ஊராட்சியில் பள்ளி, அங்கன்வாடி மையம், பசுமை வீடு, தார்சாலை அமைக்கும் பணி, மேல்நிலை நீர்தேக்க தொட்டி, கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம் மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வரும் அனைத்து பணிகளையும் துரிதமான முறையில் நடவடிக்கை எடுத்து மேற்கொள்ள வேண்டும்.
ஆங்காங்கே மழைநீர் தேங்கி வருவதால் மழைநீர் தேங்கா வண்ணம் அந்த இடங்களில் மணற்சார்ந்த கலவைகளை கொட்டி நிரப்ப வேண்டும். மழைநீர் தேங்கா வண்ணம் வடிகால்வாய்களை சரியான முறையில் தூர்வார வேண்டும். சாலை ஓரங்களில் குப்பைகள் தேங்கா வண்ணம் சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து குடியாத்தம் பகுதியில் வசிக்கும் திருநங்கைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி தருமாறும், மேலும், பள்ளிகொண்டா பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி தருமாறும் வருவாய் துறையை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் திரு.தனஞ்செயன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.செந்தில் குமரன், வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளனர்.
செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர்.