பாஜகவின் புதிய தேசிய தலைவர் இவரா?

பாஜகவின் புதிய தேசிய தலைவர் இவரா?

நரேஷ்.என்,

 பாஜகவின் புதிய தேசிய தலைவருக்கான தேர்தல் வரும் ஜன.20 தேதி நடத்தப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஜன.19 விருப்பமனுக்கள் பெறப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

 யார் இந்த நிதின் நபின் ?

45 வயதான நிதின் நபின், பீகார் மாநில அரசியலில் குறிப்பிடத்தக்க முகமாக இருந்து வருகிறார். அவர் தற்போது நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசில் சாலை கட்டுமானத் துறை அமைச்சர் ஆகப் பணியாற்றி வருகிறார். பாஜக அமைப்புப் பணிகளில் நீண்ட அனுபவம் கொண்டவராகக் கருதப்படும் நிதின் நபின், கட்சியின் அடித்தள அமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன