நீலகிரியில் மத்திய அமைச்சர் முருகன் போட்டியிடுகிறாரா?

மா.முருகன்,
நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் முருகன் நீலகிரியில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரைபவானிசாகர், மேட்டுப்பாளையம், ஊட்டி, கூடலூர், குன்னூர், அவினாசி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது. இதில் எம்பியாக ஆ.ராசா இருக்கிறார். அதில் திமுக உட்கட்சி பூசல் காரணமாக திமுக மக்கள் மத்தியில் அதிருப்தியே நிலவி வருகிறது.
அவிநாசி தொகுதியில் எம்.எல் ஏவாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த தனபால். அவர் இந்த தொகுதிபக்கம் எட்டிக்கூட பார்பதில்லை¢ என மக்கள் புலம்பி வருகின்றனர். அதே போல் எம்பி ராசா தொகுதியை மறந்துவிட்டாராம். ஆகவே நீலகிரி நாடாளுமன்ற தொகுதி கைவிடப்பட்ட தொகுதியாகிவிட்டதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.
இந்த சூழலை பாஜக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து நீலகிரி மாவட்டங்களுக்கு சுற்றி உதவிகளை செய்து வருகிறார். பெரிய திட்டங்கள் முதல் சிறிய திட்டங்கள் வரை முருகனே அனைத்து திட்டங்களையும் திறந்து வைத்துக்கொண்டிருக்கிறார்.
அதையெல்லாம் பார்த்தால் நீலகிரி தொகுதியில் எல் முருகன் வேட்பாளாராக நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.