Gg

Writing
2. கோவையில் கோ கிளாம் தீபாவளி ஷாப்பிங் கண்காட்சி தொடக்கம்!
லால்குடி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்ட்டின் திறந்து வைத்தார் – நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைப்பு
செய்தி: ஜே. அருண் ஹென்றிக்ஸ்
கோவை, அக். 24:
கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டப அரங்கில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோ கிளாம் (Go Glam) சிறப்பு ஷாப்பிங் கண்காட்சி தொடங்கியுள்ளது.
அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி, அக்டோபர் 25ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், அணிகலன்கள், நகைகள், பரிசுப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியின் தொடக்க விழா, ஒருங்கிணைப்பாளர்களான ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கீர்த்தனா கார்த்திக், கவுரி, அலமேலு, மஞ்சுளா, ஜீவிதா, மஹிமா மற்றும் சாய் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் பெண்களுக்கான நவீன வடிவமைப்பு ஆடைகள், குழந்தைகளுக்கான பொருட்கள், கைவினைப் பொருட்கள், பிரத்யேக வடிவமைப்பில் தயாரிக்கப்பட்ட கைப்பைகள் மற்றும் காலணிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், ஜிமிக்கி, கம்மல், வளையல்கள், வெள்ளி அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நகைகள் மற்றும் ஆபரணங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கொல்கத்தா, லூதியானா, குஜராத், டெல்லி, ஜெய்ப்பூர், புனே உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரத்யேகமாகக் கொண்டுவரப்பட்ட பொருட்கள் கண்காட்சியின் சிறப்பம்சமாக உள்ளன.
ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்குத் தேவையான பல்வேறு பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தெரிவித்தனர்.
கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், உதகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் கண்காட்சிக்கு வருகை தந்து பொருட்களை வாங்கி வருகின்றனர்.
தீபாவளிப் பண்டிகைக்கான ஷாப்பிங்கை ஒரே இடத்தில் மேற்கொள்ள விரும்புவோருக்கு இந்தக் கண்காட்சி வாய்ப்பாக அமைந்துள்ளது.