விவாகரத்து செய்த இயக்குநர் பாலா!

R.Rajesh kumar,
தனது ஆசை மனைவியை இயக்குநர் பாலா விவாகரத்து செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முக்கிய இடத்திஇ இருப்பவர் பாலா. அவர் சேது, நந்தா, பிதாமகன், பரதேசி உள்ளிட்ட சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.
இந்நிலையில் அவர் தனது மனைவி முத்துமலரை விவகாரத்து செய்துள்ளார்.
2004ம் ஆண்டு தனது உறவுக்கார பெண்ணான முத்துமலர் என்பவரை பாலா திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள இருக்கிறார்.
நீண்ட காலமாக நன்றாக சென்று கொண்டிருந்த திருமண வாழக்கையில் விரிசல் ஏற்பட்டு பாலாவும் - அவருடைய மனைவி முத்துமலரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்கள்.
இவருடைய விவாகரத்து தகவல் திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.