கட்டாய மதமாற்ற தடை சட்டம் தாக்கல்!நகலை கிழித்து வீசிய காங்கிரஸ்! கர்நாடகாவில் டென்ஷன்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
கட்டாய மதமாற்ற தடை சட்டத்திற்கு கார்நாடக அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்த நிலையில், மேற்படி சட்டத்தை மாநில மந்திரி அரகா ஞானேந்திரா, இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக நாளை விவாதம் நடத்துவதற்கு சபாநாயகர் விஷ்வாஷ்வார் ஹெக்டே கார்கி ஒப்புதல் அளித்தார்.
ஆனால் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார், சட்ட நகலை கிழித்து தரையில் வீசினார். இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, 'சட்டமன்றத்தில் இந்த மதமாற்ற சட்டம் குறித்து விவாதம் நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் விவாதம் செய்ய தயாராக இல்லை. இது அரசின் தவறு இல்லை' என விளக்கம் அளித்தார்.
முதல்வரின் விளக்கத்தை ஏற்காத காங்கிரஸ் கட்சியினர் கூச்சல் எழுப்பினர்ரிதனால் அங்கு டென்ஷன் ஏற்பட்டது.