ரூ.4.50 லட்சத்துக்கு விற்கப்பட்ட 7 வயது சிறுமி!

ரூ.4.50 லட்சத்துக்கு விற்கப்பட்ட 7 வயது சிறுமி!

  ரவி.ஜார்ஜ்,

    ரூ.4.50 லட்சத்துக்கு 7 வயது சிறுமியை வாங்கி திருமணம் செய்துள்ள விவகாரம் ராஜஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றின விவரம் வருமாறு, 

   ராஜஸ்தான், தோல்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மனியா பகுதியை சேர்ந்தவர் பூபால் சிங் (வயது 38). இவர் கடந்த 21-ந்தேதி 7 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

   இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்திய போது அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியது.

  மேற்படி நபர் திருமணம் செய்து கொண்ட அந்த சிறுமியை அவளது தந்தைக்கு ரூ.4.50 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.

 எனவே அந்த சிறுமியை அதிரடியாக மீட்டு வழக்கும் பதிவு செய்துள்ளனர்.