தொழிலாளர் சாவுக்கு மேலதிகாரிகள் காரணம்! போராட்ட்டம் தர்ணா!!

கு.அசோக்,
சக தொழிலாளரின் தற்கொலைக்கு நீதி கேட்டு தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் டிராக்டர் தயாரிக்கும் தொழிற்சாலையில் மோகன் என்பவர் கடந்த 10 ஆண்டுகாலமாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி மோகன் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்பபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட திருவலம் போலீசார் மோகன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் தனது தொழிற்சாலையில் பணிபுரியும் மேலதிகாரிகள் ராஜீவன், பாலா ,பிரசன்ன குல்கர்னி ஆகியோர் தன்னை தொடர்ச்சியாக மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாலும் தனது தற்கொலைக்கு அவர்கள் மூவருமே காரணம் என்றும் எழுதி வைத்திருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் திருவலம் காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே தொழிலாளியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க கோரி தொழிற்சாலை வளாகத்தின் முன்பு சக தொழிலாளர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிற்சாலை வளாகத்தின் முன்பு அமர்ந்து சக தொழிலாளியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவத்தால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.