ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! சென்னை டு பட்டாபிராம் மின்சார ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்!

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! சென்னை டு பட்டாபிராம் மின்சார ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்!

 ம.பா.கெஜராஜ்,

  சென்னை டு பட்டாபிராம் மின்சார ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக       தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது:-

 சென்னை சென்ட்ரல் சாபர்பன் நிலையத்திலிருந்து இருந்து பட்டாபிராம், பட்டாபிராம் மிலிட்டரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் இன்று(சனிக்கிழமை) முதல் வருகிற 25-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

 மூர் மார்க்கெட் - பட்டாபிராம் மிலிட்டரி இடையே இரவு 10.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. பட்டாபிராம் மிலிட்டரி - சென்னை சென்டிரல் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஆவடி-சென்டிரல் இடையேயும், சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சென்டிரல்-வியாசர்பாடி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி - சென்டிரல் இடையே காலை 4.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் பேசின் பிரிட்ஜ் -சென்டிரல் இடையேயும், சென்டிரல் - கும்மிடிப்பூண்டி இடையே காலை 6.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சென்டிரல்-பேசின் பிரிட்ஜ் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

 சூலூர்பேட்டை - சென்டிரல் இடையே காலை 5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் பேசின் பிரிட்ஜ் -சென்டிரல் இடையேயும், சென்டிரல்- சூலூர்பேட்டை இடையே காலை 7.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சென்டிரல்- பேசின் பிரிட்ஜ் இடையேயும், சூலூர்பேட்டை - சென்டிரல் இடையே இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் கொருக்குபேட்டை-சென்டிரல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

 சென்னை சென்டிரல் - திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11 மணிக்கு இயக்கப்படும்.

சென்ட்ரல் - ஆவடி இடையே இரவு 11.45 மணி இயக்கப்படும் மின்சார ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும்.

 சென்ட்ரல் - ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மணி இயக்கப்படும் மின்சார ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.