வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கரை பயன்படுத்த கூடாது!

வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கரை பயன்படுத்த கூடாது!

 உ.சசிகுமார்,

தனிப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் போலீஸ் ஸ்டிக்கரை பயன்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து காவல்துறை உயரதிகாரிகளுக்கும் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஏ.அருண் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். காவல்துறையில் இல்லாத நபர்கள், போலீஸ் ஸ்டிக்கரை பயன்படுத்தி குற்றச் செயலில் ஈடுபட வாய்ப்புள்ளதால் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.