பெண் காவலரை வாழ்த்திய டிஐஜி!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
20 ஆண்டு காவல் பணி நிறைவு செய்து தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் பெற்ற பெண் காவலருக்கு நற்சான்றிதழ், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது
26.01.2023 குடியரசு தின அணிவகுப்பின் போது, 20 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் கோவை சரகம் பணியிடை பயிற்சி மையத்தில் பணிபுரியும் பெண்காவலர் திருமதி.பூங்கொடி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேற்படி பெண் காவலருக்கு தமிழக அரசின் நற்பணி சான்றிதழை இன்று (17.04.2023) கோவை சரக காவல் அலுவலகத்தில் வைத்து கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. விஜயகுமார், இ.கா.ப., அவர்கள் வழங்கி, அவரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.