வணிகவரித்துறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரைய்டு!

க.பாலகுரு,
வணிகவரித்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். அதில்1 .50 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூ£,¢ துர்காலயா தெருவில் அமைந்துள்ளது மாவட்ட வணிகவரித்துறை இணை ஆணையர் அலுவலகம்.
இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டதில் வணிகவரித்துறை இணை ஆணையர் அருண பாரதியிடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல் விரைவில் வேலூரில நடக்கலாம் என்று கூறப்படுகிறது.